சீர்காழி தென்பாதியில் தமிழக மாதர்கள் சன்மார்க்க சங்கத்தின் 72 - வது ஆண்டு விழா
Jan 06 2026
21
சீர்காழி , ஜன , 07 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் தமிழக மாதர்கள் சன்மார்க்க சங்கத்தின் 72-வது ஆண்டு விழா திங்கள் மற்றும்செவ்வாய் ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்றது. சீர்காழி தென்பாதி திரு அருட்பிரகாச வள்ளலார் மாதர்கள் சன்மார்க்க சங்க திருச்சபை சங்கப்புரவலர் தெய்வத்திரு.வெ.செகதம், தெய்வத்திரு. புனிதவல்லி குற்றால நாராயணன் ஆகியோர் ஆசியுடன் நடைப் பெற்ற முதல் நாளில் மாலை 5.00 மணிக்கு குரு.ந.சட்டையப்பன் அவர்களின் திருஞானசம்பந்தர் இசைப்பள்ளி மாணவ, மாணவிகள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6.00 மணிக்கு திருவிளக்கு பூஜையை
சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி துவங்கி வைத்தார். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்கிழமை
பகல் 1.00 மணிக்கு ஜோதி வழிபாடை தொடர்ந்து சமபந்தி போஜனம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சீர்காழி நகர் மன்ற உறுப்பினர் எஸ்.வேல்முருகன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்
இரா. கண்ணதாசன் முன்னிலை வகித்தார்கள்.
மாலை 06.00 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி விழா நடைப்பெற்றது.
விழா அமைப்பு மற்றும் ஏற்பாடுகளை
இரா.சிவஜோதிராமன் செய்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?