சுத்தம் நித்தம் தேவை

சுத்தம் நித்தம் தேவை


சுத்தமில்லா இல்லம் ஆரோக்கியத்தை இழக்கும்...

சுகாதாரமே நம் 

சுகந்தத்தில் அஸ்திவாரம் 

தினமும் சுத்தம் செய்து தூசியை விலக்கி,

தூய்மை என்ற தென்றலை சுவாசிப்போம்

நீர் அது நம் உயிர் என சுத்தமான நீரை சேமிப்போம்

குப்பை கூடி துர்நாற்றம் வீசாமல் காப்போம் 

நோய் நெருங்காமல் ஓடி மறைந்திட சுத்தம் காப்போம் 

நலமுடன் வாழ்வதே நம் கொள்கை என கொள்வோம் 

சுத்தம் நித்தம் தேவை என்ற தாரக மந்திரத்தை கடைபிடிப்போம் 

சுகமாய் வாழ்வதற்கு அதுவே துணை

இதை உணர்ந்தோர் காண்பது சொர்க்கம்

மறந்தோர் தத்தளிப்பது திரிசங்கு சொர்க்கம்


 உஷா முத்துராமன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%