சென்றுகொண்டிருக்கிறேன் நான்

சென்றுகொண்டிருக்கிறேன் நான்

புலர் பட்டிருக்கவில்லை இன்னமும்.

திறந்திருந்த ஒன்றிரண்டு தேநீரங்களின் முன் அமர்ந்திருந்தவர்கள் பேச்சின் முடிச்சவிழ்த்துக் கொண்டிருந்தார்கள்.


நடை தெளித்துக் கொண்டிருந்த பெண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக!


வாசலோரம் நின்றிருந்த கார் சொல்லி சென்ற செய்தி கனம் கொண்டு!


கூடு கொண்ட பறவைகளின் விடுபடல் 

ஏகாந்தவெளி விரிந்த சப்தமாய்!


சாலையோரம் குடை விரித்திருந்த மரம் தந்த காற்று மனதிற்கு இதமாய்!


தலைமை தபால் நிலையத்தின் வாசலிலிருந்த அஞ்சல்பெட்டி கிளர்த்திச்சென்ற ஈரம் பூத்த நினைவுகள் 

மலர்ச்சி கொள்ளச் செய்ததாய்.


அருகாமை ஊருக்குச்செல்கிற 

முதல் நகரப்பேருந்து வெளிச்சம் கொண்டு!


தேவை நிமித்தம் விரைந்து கொண்டிருந்த 

இரு சக்கர வாகனங்கள்.


காதுரசிச்சென்ற பட்டாம் பூச்சி உதிர்த்து விட்டுச் சென்ற வர்ணங்களை 

உடல் கொண்டு.


பழுத்த இலையினருகில் துளிர்த்துக் கொண்டிருந்த புங்க மரத்து தளிர்.



                  

விமலன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%