சென்னை, ஜன. 7-
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக வருகிற 9ம் தேதி முதல் சொந்தஊர் செல்ல அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சென்னை மற்றும் இதர நகரங்களில் இருந்து ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட மற்ற இடங்களுக்கு ஜனவரி 9ம் தேதி 1,050 பேருந்துகளும், ஜனவரி 10ல் 1,030 பேருந்துகளும், ஜனவரி 11ல் 225 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. ஜனவரி 12ல் 2,200 பேருந்துகளும், ஜனவரி 13ல் 2,790 பேருந்துகளும், ஜனவரி 14ல் 2,920 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 10.,425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?