சென்னை ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் கொள்ளை முயற்சி: வடமாநில ஆசாமி கைது
Sep 17 2025
37

சென்னை, செப். 16–
சென்னை ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வடமாநில ஆசாமி கைது செய்யப்பட்டான்.
சென்னை, வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் சீனிவாசன் என்பவர் தனியார் நிறுவனத்தின் வேலை செய்து கொண்டு, ஏடிஎம் மையங்களை கண்காணிக்கும் பணியை செய்து வருகிறார். முகப்பேர் கிழக்கு, பாரி சாலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் பொதுமக்கள் பணம் எடுக்க சென்று பணம் வெளியே வராமல் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், சீனிவாசன் அங்கு சென்று பார்த்தபோது, ஏடிஎம் வாசல் அருகே நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்ய சென்றபோது, இரு நபர்கள் ஓடிவிடவே, ஒருவரை மட்டும் பிடித்து விசாரணை செய்தார்.
அப்போது பிடிபட்ட நபர் தப்பியோடிய நபர்களுடன் சேர்ந்து, அந்த ஏடிஎம் மையத்திலுள்ள இயந்திரத்தில் பணம் வரும் இடத்தில் இரும்பு தகட்டை வைத்து பணம் வராமல் தடுத்து, வெளியே நின்று கணிகாணித்ததும், வாடிக்கையாளர்கள் வெளியே சென்றதும், பின்னர் வெளியே நின்றிருக்கும் இவர்கள் ஏடிஎம் மையத்திற்குள் சென்று இரும்பு தகட்டை எடுத்து, அங்கு வந்திருக்கும் பணத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது.
பிடிபட்ட நபரை சீனிவாசன் மற்றும் குழுவினர் ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் ஒப்படைத்து புகார் கொடுத்ததின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட நபர் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சிவா (20) என்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சிவா விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?