பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சா கடத்தல்: 3 வடமாநில ஆசாமிகள் கைது
Sep 17 2025
129
ஆவடி, செப். 16–
பூந்தமல்லியில் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில ஆசாமிகள் 3 பேரை கைது செய்தனர்.
பூந்தமல்லி பைபாஸ் வெளியூர் செல்லும் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலியிடத்தில் 3 பேர் கஞ்சாவை விற்பனை செய்ய எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் டி.சுபாஷினி தலைமையில் பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் கே.நாட்டாளம்மை ஆகியோர் கொண்ட குழு சம்பவ இடம் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது சந்தேகத்திற்கிடமாக ஷோல்டர் பேக்குடன் திரிந்துக்கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஒடிசாவைச் சேர்ந்த ஷிபா பேகேரா, ராமகாந்த மஜ்ஹி, அலேஹா புஞ்ஜி ஆகிய3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் பூந்தமல்லி கனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
21 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்த பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசாரை ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் வெகுவாக பாராட்டினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?