16 வயது சிறுவனுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை: கேரளாவில் 14 பேர் மீது வழக்குப் பதிவு
Sep 17 2025
43

கேரளா:
கேரளாவில் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வந்த 16 வயது சிறுவன் ஒருவர், பல நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் 16 வயது சிறுவன் ஒருவர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்ததாக தெரிகிறது. அப்போது அந்தச் சிறுவனுக்கு டேட்டிங் செயலி மூலம் சிலருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்ட அவர்கள், அச்சிறுவனை வரவழைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள், அந்தச் சிறுவனை பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
அந்தச் சிறுவனின் தாய் இச்சம்பவத்தை கண்டறிந்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் பேரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் சிறுவனை காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து அடையாளம் காணப்பட்ட 14 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 14 பேரும் 25 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள். அதில் ரயில்வே ஊழியர், அரசியல்வாதி ஆகியோர் அடங்குவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?