செய்யாறில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் 4 வது வார பயிற்சி வகுப்பு:
செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் இனிப்பு வழங்கினர்.
செய்யாறு நவ.2,
செய்யாறில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நான்காவது வார சனிக்கிழமை திருக்குறள் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்காவது வார சனிக்கிழமை முன்னிட்டு திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜி ஜெயகாந்தன் தலைமை தாங்கி பயிற்சியினை துவக்கி வைத்தார்.
பயிற்சியாளர் புலவர் ந. கனகசபை முன்னிலை வகித்தார். திருக்குறள் திருப்பணிகள் பயிற்சியாளரும், செய்யாறு வட்ட முத்தமிழ் சங்க தலைவருமான எறும்பூர் கை .செல்வகுமார் வரவேற்றார்.
12 மாணவர்கள், 40 மாணவிகள் என 52 மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர். மாணவர்களே உற்சாகப்படுத்தும் விதமாக செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் அனைவருக்கும் கடலி மிட்டாய் வழங்கப்பட்டது பின்னர் அவர்களை பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் அழைத்துச் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
திருக்குறள் சிறப்பு குறித்து ஆசிரியர் பாரதி பேசினார். சிறப்பு அழைப்பாளர் தலைமை ஆசிரியர் தேன்மொழி, பொருளாளர் கோவேந்தன், ஆசிரியர்கள் தமிழ் தேனி இளவரசி மோதிலால் விக்கிரமாதித்தன் முபாரக் உள்ளிட்ட பலன் நிகழ்வில் பங்கேற்றனர்.
முடிவில் செயலாளர் ம.பழனி நன்றி கூறினார்.
திருக்குறள் பயிற்சி மாணவர்களுக்கு இன்றைய நிகழ்வில் செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தன்னம்பிக்கை வகுப்பு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?