ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் டிரோன்கள்! ஒரே வாரத்தில் 3 வது முறை!
ஜம்மு - காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டுக்குச் சொந்தமான டிரோன்கள் மீண்டும் நேற்று (ஜன. 16) தென்பட்டன. இதனை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்றாவது முறையாக சர்வதேச எல்லையில் பாகிஸ்தானின் டிரோன்கள் எல்லையைத் தாண்டும் சம்பவம் நடந்துள்ளது.
இவை பெரும்பாலும் எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகள் நுழைவதற்கான வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிவதற்காக அனுப்பப்பட்டவையாக இருக்கலாம் என இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியையொட்டிய சம்பா, ராம்கார், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள தேக்வார் பகுதிகளில் நேற்று இரவு 7 மணியளவில் டிரோன்கள் தென்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினர் இவற்றைத் தாக்கி அழித்தனர். இதோடு மட்டுமின்றி எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜனவரி 11 முதல் 15 ஆம் தேதி வரையில் 15 டிரோன்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?