தங்கம் ஒரு சவரன் ரூ.87,120க்கு விற்பனை: ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்தை தொட்டது

சென்னை, அக்.1–
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆபரண தங்கம் கிராம் 10,770 ரூபாய்க்கும், சவரன் 86,160 ரூபாய்க்கும் விற்பனையானது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 10,860 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து, ரூபாய் 86,880 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,890க்கு விற்பனை ஆகிறது. கடந்த 3 நாட்களில் சவரனுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, சாமானிய மக்கள் தங்க நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.161க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 1 லட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?