தட்கல்’ திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பம் தாக்கல் அவகாசம் 31ந் தேதி வரை நீட்டிப்பு
Dec 21 2025
10
தட்கல் (TATKAL) திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 31–ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 2025–-26–ம் நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள விண்ணப்பதாரர்கள், அரசு சிறப்புத் திட்டங்கள் மற்றும் புதிய சுயநிதித் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் பயன்பெறுவர்.
இந்நிலையில், தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்கள் மற்றும் போதிய கால அவகாசம் இல்லாமை காரணமாக விண்ணப்பிக்க இயலவில்லை என விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் (TATKAL) கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், இந்த காலக்கட்டத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு வழங்கும் வழிகாட்டுதலும் மற்றும் ஒதுக்கீடு அளவிற்கும் ஏற்ப தட்கல் திட்டத்தின் கீழ் படிப்படியாக விவசாய மின் இணைப்புகள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி வருகின்ற டிசம்பர் 31-–ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?