தமிழ்​நாடு முழுவதும் 3வது நாளாக செவிலியர்​கள் போராட்டம்

தமிழ்​நாடு முழுவதும் 3வது நாளாக செவிலியர்​கள் போராட்டம்


பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை​யில் உண்ணா​விரதம் இருந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்​து, தமிழகம் முழுவதும் செவிலியர்​கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


திமுக அளித்த வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர் நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு செய்த மேல்​முறை​யீட்டை கைவிட வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தொகுப்​பூ​திய செவிலியர்​கள் நேற்று முன்​தினம் சென்னையில் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.


தமிழ்​நாடு செவிலியர்​கள் மேம்​பாட்டு கழகம் சார்​பில் நடந்த இந்த உண்​ணா​விரதப் போராட்டத்​தில் 750-க்​கும் மேற்பட்ட செவிலியர்​கள் பங்​கேற்​றனர் அதைத்​தொடர்ந்​து, மாலை​யில் செவிலியர்களைக் கைது செய்து வாக​னத்​தில் ஏற்​றிய போலீ​ஸார் கிளாம்​பாக்​கத்​தில் இறக்கி விட்​டனர். இதையடுத்​து, கிளாம்​பாக்​கம் பேருந்து நிலை​யத்​தில் செவிலியர்கள் நள்​ளிர​வில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.


இதைத்​தொடர்ந்து அவர்களைக் கைது செய்​து, ஊரப்​பாக்​கத்​தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீ​ஸார் அடைத்தனர்.

அங்​கும் செவிலியர்கள் போராட்​டத்​தைத் தொடர்ந்தனர். செவிலியர்​கள் கைது செய்​யப்​பட்​டதைக்கண்​டித்து, தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​கள், மாவட்ட தலைமை மருத்​துவமனைகளில் நேற்று செவிலியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இந்நிலையில் இன்று 3வது நாளாக தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நர்சுகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%