மட்குடம் உடம்பிலே..
மனக்குடம் ததும்புதே.!
சிந்தாது நடக்கிறேன்
தாதிமனம் நீர்க்குடத்தே!
இக்குடம் வனைந்தவன்
எங்கேயெனத் தேடினேன்..
அக்குடம் ததும்பாமல்..
தாதிமனம் நீர்க்குடத்தே!
மிக்க வோர் அன்பிலே..
மீட்சியை வேண்டியே..
மெய்யாக தாகம் தீர..
சிக்கலின் நடுலிலே..
கல்லிலே முள்ளிலே..
நடக்கிறேன் பாரடா..
தாதிமனம் நீர்க்குடத்தே!
பனிக்கும் உடைந்ததே..
பிறக்கிறேன் தாயிடம்..
பாற்க்குடம் தேடிவந்தே
நடக்கிறேன் பூமிமேலே
தனிக்குடம் அல்லவே..
தலையிலே பாரடா..
எத்னைக் குடங்களோ..
தாதிமனம் நீர்க்குடத்தே!
இக்குடம் உடைந்தாலும்
இன்னுமொரு குடம்தரும்
இறைவனை வேண்டிநின்றேன.. மட்குடம் ஆனலும் ..
மறவாத நினைவுடனே ... பாதையைக் கடக்கிறேன்..
தாதிமனம் நீர்க்குடத்தே!
*வே.கல்யாண்குமார்.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?