திமுக கூட்டணியை விமர்சிப்பதே பழனிசாமிக்கு ஒரேசெயல்திட்டம் திருமாவளவன் குற்றச்சாட்டு

திமுக கூட்டணியை விமர்சிப்பதே  பழனிசாமிக்கு ஒரேசெயல்திட்டம்  திருமாவளவன் குற்றச்சாட்டு



சென்னை, ஜூலை 20-

திமுக கூட்டணி குறித்து விமர்சிப்பதுதான் பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட செயல்திட்டம் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக கூட்டணி குறித்து பேச அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு யார் கொடுத்திருக்கிறார் என்பது தெரியாது. ஆனால் மக்களைச் சந்திக்கும் அவர், மக்கள் சார்ந்த கோரிக்கை குறித்து பேசுவதைவிட திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது அல்லது விமர்சிப்பது என்ற நிலையில் உரையாற்றுகிறார். இதில் உள்ள பின்புலத்தை சாமானிய மனிதர்களாலேயே அறிய முடியும். அவராக இதைப் பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள் என்பதைத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%