திருக்கோவிலூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: ஸ்டாலின் உத்தரவு

திருக்கோவிலூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்  குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: ஸ்டாலின் உத்தரவு

சென்னை, செப்.16–


கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், கீழத்தாழனூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது–


கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் கலியபெருமாள் என்பவர் நேற்று முன்தினம் (14–ந் தேதி) கீழத்தாழனூர் கிராமத்தில் இரும்புக்குழாயினை எடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக உயர்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.


மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த கலியபெருமாளின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.


இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%