திருப்பத்தூர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் நலத்திட்ட உதவி: கலெக்டர் சிவசெளந்திரவல்லி வழங்கினார்
Sep 18 2025
39

திருப்பத்தூர், செப். 16–
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் கலெக்டர் க.சிவசௌந்திரவல்லி, பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளி களிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் முதலமைச்சரின் முதன்மை திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வரபெற்றமனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் 345 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், எஸ்.கே.ரோடு, ராஜீவ்காந்தி நகர், குண்டாலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயராணி என்பவர் கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் தையல் இயந்திரம் வழங்க கோரிக்கை மனு அளித்ததன் அடிப்படையில், உடனடியாக தீர்வு காணப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தையல் இயந்திரத்தை கலெக்டர் க.சிவசௌந்திரவல்லி வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) புஷண குமார், உதவி இயககுநர் (ஊராட்சிகள்) முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கதிர்சங்கர், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) மிரியாம் ரெஜினா, (கணக்கு) சென்னகேசவன், அனைத்து துறை அரசு அலுவலா்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?