திருப்பூரில் 3203 மாணவ, மாணவிகள் சமாதான புறா வடிவில் நின்று சாதனை
Sep 28 2025
34

திருப்பூர், செப். 26-–
திருப்பூரில் 3203 மாணவ, மாணவிகள் உலக அமைதி சின்னமான சமாதான புறா வடிவில் நின்று சாதனை நிகழ்த்தினர்.
உலக அமைதி தினத்தை முன்னிட்டு உலக அமைதியின் அவசியத்தை வலியுறுத்தி ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3203 மற்றும் மாவட்ட ரோட்ராக்ட் சங்கங்கள் இணைந்து, மாணவ,மாணவிகள் சமாதான புறா வடிவில் நின்று சாதனை படைக்கும் உலக சாதனை நிகழ்ச்சியினை திருப்பூர் அவிநாசி வேலாயுதம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேவதி நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3203 கவர்னர் தனசேகர் தலைமை தாங்கி வெள்ளை நிற புறாக்களை பறக்க விட்டு நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தார். ரேவதி கல்வி நிறுவன டைரக்டர் ஹரி பிரணவ் வரவேற்றார். மாவட்ட ரோட்ராக்ட் பிரதிநிதி செல்வ விக்னேஷ் உலக அமைதி தின நிகழ்வு குறித்து விளக்கி பேசினார்.
தொடர்ந்து மாவட்ட ரோட்ராக்ட் தலைவர் ராஜலட்சுமி உலக அமைதி, ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தியும், பேசினார்.
"ரோட்டரி, ரோட்டரேக்ட் – அமைதியை ஊக்குவிக்கிறது” என்ற கோஷத்துடன் உலக அமைதி உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். முன்னாள் ரோட்டரி கவர்னர்கள் இளங்குமரன், கார்த்திகேயன், சண்முக சுந்தரம் மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர் நிறுவனர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருந்து 28 கல்லூரிகள், 5 அரசு பள்ளி இன்டராக்ட் கிளப், 18 சமூக நல அமைப்புக்களை சேர்ந்த 3203 மாணவ, மாணவிகள் உலக அமைதி சின்னமான புறா வடிவில் நின்று சாதனை படைத்தனர்.
இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், எலைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் பிரைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் இந்த உலக சாதனை அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்டு சாதனை படைத்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சர்வதேச ரோட்டரி சங்க சேர்மன் ஹோல்கர் நாக் கையெழுத்திட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில் மாவட்ட ரோட்ராக்ட் செயலாளர் நவீன்பாரதி, ரித்திகா ஆகியோர் நன்றி கூறினார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?