திருவாரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.110 கோடி கடனுதவி: கலெக்டர் வழங்கினார்

திருவாரூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.110 கோடி கடனுதவி: கலெக்டர் வழங்கினார்

திருவாரூர், செப்.17– -


திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 110 கோடி கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.


தமிழக துணை முதல்வர் சேலம் மாவட்டத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3500 கோடி நேரடி வங்கி கடன் உதவி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் 1297 குழுக்களில் உள்ள 13,142 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 110 கோடியே 7 இலட்சம் கடன் உதவிகளை திருவாரூர் மாவட்டக் கலெக்டர் வ.மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய கழகத்தலைவர் என்.இளையராஜா ஆகியோர் வழங்கினர்.


திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 379 குழுக்களுக்கு ரூ.29.84 கோடி மதிப்பீட்டிலும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 416 குழுக்களுக்கு ரூ.32.55 கோடி மதிப்பீட்டிலும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 289 குழுக்களுக்கு ரூ.26.02 கோடி மதிப்பீட்டிலும், நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 213 குழுக்களுக்கு ரூ.21.66 கோடி மதிப்பீட்டிலும் என மகளிர் சுய உதவிக்குழு வங்கி கடன், வட்டார வணிக வள மையத்தின் மூலம் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி, தொழில் முனைவோருக்கான தனிநபர் கடன் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 1297 குழுக்களில் உள்ள 13,142 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் ரூ.110 கோடியே 7 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.


மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அடையாள அட்டை வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள், நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு 25 கி வரையிலான (மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்கள்) இலவசமாக எடுத்து கொண்டு பயணிக்கலாம்.


மகளிர் சுய உதவிக்குழு அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டத்தின் முதன்மை சான்றாகவும் கருதப்படுவார்கள்.


கோ - ஆப்டெக்ஸ் துறையிலிருந்து வாங்கும் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள தள்ளுபடிக்கு மேல் 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் உற்பத்தி துறையால் வழங்கப்படும் பல்வேறு கடன்களை பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆவின் தயாரிப்புகளான நெய், பால்கோவா, மைசூர் பாக், காஜூ கத்லி, பாதுஷா, வெண்ணிலா, ஸ்டாபெரி ஆகிய பொருட்களில் சலுகை பெறலாம். மாநில முழுவதும் உள்ள இ-சேவை மையத்தை பயன்படுத்துபவர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.


இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னம்பலம், திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ம டாக்டர் அசோகன், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் ரங்கநாதன் பிரபு, மருத்துவக் கல்லூரி நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராமச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் பாலன் மற்றும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%