தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
Jul 16 2025
10

தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் கட்டுரை, ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலன் தலைமை வகித்தார். சமூக அறிவியல் ஆசிரியர் சூரியகுமார் முன்னிலை வகித்தார், சமூக ஆர்வலர் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவிகள் துர்காதேவி, தர்ஷினி மீனரோசினி, சுபிகா, சம்யுக்தா, சுவாதி ஜோதிகா ஆகியோர் காமராஜர் பற்றி உரை நிகழ்த்தினர்கள். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி நிறைவில் ஆங்கில ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?