--------------------------
வாடி இருக்கும்
தாமரை முகங்கள்
சூரியனைக்கண்டு
மலர்வதில்லை
அடக்க முடியாத
சிரிப்பலைகளில்
சில்லென்றுபூக்கின்றன!
கவனம் சிதையாமல்
கருத்துகளைச்
சுகமாய்ச்சுமந்து
காந்தமாய் ஈர்த்து
நினைவுகளில் நிலை
நிறுத்தும் களிப்புமிகு
கடிவாளம்!
செவிக்கு நல்லவிருந்தாய்ச்
சோகத்தை மாய்க்கும்
மருந்தாய் ஆயுளை
அதிகரிக்கும் அமிழ்தாய்ச் சொர்க்கத்தின் நிழலாய் நிம்மதியை
தருகின்றது!
வயிறு புடைக்க
உணவினை புசித்தால்
உறக்கம் உறவாடும்
வயிறு குலுங்க
சிரித்து விட்டால்
உற்சாகம் உறவாடும்!
இங்கே
வான்மழை
பொய்த்துவிட்டால்
உலகுக்குப்பஞ்சம்
சிரிப்புமழை பொய்த்துவிட்டால்
உணர்வுகளுக்குப்பஞ்சம் ! உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோராவர்
சிந்தை மகிழ
சிரிப்புகள் தந்தோர்
சிறகுகள் தந்தோராவர்!

கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?