விட்டுக்கொடுத்து வாழ்ந்து பார்
மெட்டு போட்ட இசை போல வாழ்க்கை அமையுமே...
விவாதம் செய்வது வீண் வேலை விட்டு விட்டால் சமரசம் ஆகுமே,
இதில் யாரும் குறைந்தவர் இல்லை என்று உணர்ந்து விடு
வேதனையில் வார்த்தைகளை விட்டு விட்டால் சோதனை மேல் சோதனை என்று வேதனை பட வைக்கும்
விவாதத்தில் அடுத்தவர் பேச்சை செவி கொடுத்தால் அதுவே விட்டுக் கொடுத்தல்
விவாதம் செய்து வெற்றி பெற்றால் அதில் துன்பமே வரும்
அடுத்தவர் மனம் வேதனையில் புழுங்க நாம் வாதித்து வெற்றி பெறுவதில் என்ன லாபம் ..
விட்டுக் கொடுப்போம் சமரசமாக உறவுகளுடனும் நட்புடனும் வாழ்வோம்...
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%