நட்பும் வரமே

நட்பும் வரமே


விட்டுக்கொடுக்கும் வெறுக்கா திருக்கும்

தட்டிக் கொடுக்கும் தாங்கி நிற்கும் /

குட்டிப் பேசும் குறையை நீக்கும்,

சுட்டிக்காட்டும் சூதை விலக்கும் /


ஒட்டி நிற்கும் உயர்த்திப் பிடிக்கும்

முட்டி நின்றால் விட்டுப் பிடிக்கும்,

கட்டி இழுக்கும் கவலை தீர்க்கும் ,

பட்டுப் போகாப் பாதை காட்டும்,


கிட்டே நெருங்க கிளைகள் விரியும், 

எட்டிச் செல்லா திருக்க விரும்பும்

கொட்டிக் கொடுத்தும் குணமே திரியா,

நட்பும் வரமே , நல்லோர் உறவே /


திருமதி. இரா இராஜாமணி

ஈரோடு

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%