பெருமை !

பெருமை !


நம்ம பரம்பரை ஒன்னும் சாதாரண பரம்பரை இல்லை யானை, மாடு இதெல்லாம் வெச்சு நெற்கதிர்களை போரடிச்ச பரம்பரை !


அப்பா அடிக்கடி சொல்லி வந்தார் இந்த வாக்கியத்தை !


'வீட்டுல அட்டி, அட்டியா நெல் மூட்டை இருக்கும், மஞ்சள் இருக்கும், புளி இருக்கும் வறுமைக்கு இடமே இல்லாமல் இருந்தது....

பஞ்சமே தெரியாம வளர்ந்த குடும்பம் நம்ம குடும்பம் !


கொஞ்சம் பெரியவன் ஆனதும் அப்பாவிடம் கேட்டான் அவன் !


"அப்பா வசதியான பரம்பரையில் இருந்து வந்த நாம ஏன் இப்போ வறுமையில் இருக்கோம் !"


பெருமூச்சு விட்டார் அப்பா...


"எல்லாம் குடி தான் மகனே குடி , குடியில் மதி மயங்கி போய் பல ஏக்கர் நிலத்தையும் வித்து இப்படி பரம்பரை சொத்தையே அழிச்சிட்டாரு தாத்தா... !"


ஒவ்வொரு வம்சங்களும் அழிவின் பின்னால் ஒவ்வொரு காரணங்களும் இருக்கவே செய்கிறது...

அதில் முதன்மை வகிப்பது என்னவோ 'மது 'தான் !



எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%