
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசாரத்துக்கு நிபந்தனையுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்வரை புதிதாக எந்த கூட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ’தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ சுற்றுப்பயணத்துக்கு நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
மதுரையில் நடைபெறும் தொடக்க விழாவில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்று, நயினார் நாகேந்திரனின் பிரசாரத்தை அக். 12 ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளார்.
பிரசாரத்துக்கு வரும் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், குழந்தைகள், கர்ப்பிணிகள் பங்கேற்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் அக். 12 ஆம் தேதி தொடங்கும் நயினார் நாகேந்திரனின் முதல்கட்ட சுற்றுப்பயணம், நவ. 17 ஆம் தேதி நெல்லையில் நிறைவடைகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?