ரூ.90 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! கலக்கத்தில் நடுத்தர வர்க்கம்!

ரூ.90 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! கலக்கத்தில் நடுத்தர வர்க்கம்!


 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,200-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.89,600-க்கும் விற்பனையாகி வருகிறது.


வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 166 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,66,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தொடர்ந்து ஏற்றத்திலேயே தினமும் ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் தங்கம் விலை கடந்த திங்கள்கிழமை (செப்.29) முதலே தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.


உலகளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக உலக நாடுகள் தங்களது மத்திய வங்கிகளில் தங்கக்கட்டிகளை வாங்கிக் குவித்ததன் விளைவாகவும் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் வகையில் தொடர் ஏற்றம் கண்டுள்ளது.


அக்.3-இல் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.87,200-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை விலை மீண்டும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,600-க்கு விற்பனையானது.


நேற்று (திங்கள்கிழமை) காலையில் கிராமுக்கு ரூ.110-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து சவரன் ரூ.88,480-க்கும் விற்பனை நிலையில், மீண்டும் மாலையில் வர்த்தகம் நிறைவடையும் தருவாயில் கிராமுக்கு ரூ. 65-க்கும், சவரனுக்கு ரூ. 520-ம் உயர்ந்து சவரன் ரூ. 89,000-க்கும் விற்பனையானது.


இந்த ஆண்டில் துவக்கத்தில் (ஜனவரி) சவரன் ரூ.60,000-க்கு விற்பனையான தங்கம் விலை, ஜூன் மாதத்தில் ரூ. 72,000-ஐயும், தற்போது கிட்டத்தட்ட ரூ. 90,000-ஐயும் நெருங்கியுள்ளது.


தங்கத்தின் விலை கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ. 35,000 வரை ஒரு சவரன் தங்கம் விலை ஏற்றம் கண்டுள்ளது.


ஒருபுறம் விலை ஏறினாலும், தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கத்தின் மீது முதலீடு செய்ய பலரும் முனைப்பு காட்டுவதால் தீபாவளிக்கு முன்னதாகவே ஒரு சவரன் வரலாற்றில் இல்லாத நிலையில் ரூ. 1 லட்சத்தை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். நடுத்தர வர்க்கத்தினர் கலக்கமடைந்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%