
அன்னை காமாட்சி
காவடி சிந்து
அன்னையே ஆனந்த வல்லியே
அகிலாண்ட கோடி நாயகியே
அம்ருத ரூபிணி ஆனந்த நாயகி
அருள் புரிவாய் அம்மா காமாட்சியே
உன்னை தொழுது மகிழ்ந்தேனே
உலகில் நீயின்றி வேறு யாரம்மா
உயிர்களை காக்கும் நாயகி
உன்பதம் பணிந்தேன் காமாட்சியே
என்னையே தந்து பணிந்தேனே
என்றும் அருள் புரிந்து காத்திடம்மா
எந்த நிலையிலும் பணிந்திட
என் கரம் குவித்தேன் காமாட்சியே
தாயே உந்தன் கீர்த்தனை
தமிழின் இன்ப வெள்ளமே
உள்ளம் உருக பிரார்த்தனை
உந்தன் அருளின் பிரவாகமே
அன்பின் வடிவம் நீயன்றோ
அழகின் உருவம் நீயன்றோ
அருளும் கைகள் உனதன்றோ
அனைத்தும் உந்தன் அசைவன்றோ
அன்னை உந்தன் அருளிலே
அகமும் மகிழ்ந்த மனதிலே
அன்பும் அறனும் நினைவிலே
அனைத்தும் தருவாய் வாழ்விலே
நற்கல்வி பெற கலைமகளாய்
நற்செல்வம் பெற அலைமகளாய்
நல்வாழ்வு பெற உமையவளாய்
நவராத்திரியில் துர்க்கையாய் வருவாய்
அம்மா உனைப் பாட பாட கீதமே
ஆனந்தமாய் கேட்டு அருள்வாயம்மா🙏🏻
சோபனா விச்வநாதன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?