மரணம் பறித்த பூக்கள்

மரணம் பறித்த பூக்கள்


தீரா பேராசை 

உணவினை குறைக்கவே இல்லை 

கல்லறைக்குழி



எப்போதும் உறுதியாகும் 

மா ரணம் என்பது 

மரணம் என்று 


மரித்தோர் இல்லம் 

வாடவே இல்லை

தோட்டத்தில் பூ


மரணம் நிகழ்ந்த இல்லம்

உயிர்த்தெழுப்பப்படும் 

சில உறவுகள் 


இறந்தவர் வீட்டில் 

அங்கும் இங்கும் பறக்கும் 

குருவிக்கூட்டில் 

சில புதிய குஞ்சுகள் 


குழி பறிக்க பறிக்க 

மேலெழும்பி வரும் 

சில நினைவுகள் 


இறந்தவரைப் பார்க்கையில் 

கண்ணாடிப் பெட்டியில் எதிரொலிக்கும் 

நம் முகம் 


சொந்த வீடு 

அந்நியராகக் கருதப்படும் 

மரணமடைந்தவர்


மரணம் எழுப்பும் 

மௌனத்தின் கேள்விகள் 

பதில் சொல்லத்தான் யாருமில்லை


பொறுமை இல்லை 

முட்டிக்கொண்டு வரும் 

கண்ணீர் 



ஜவஹர் பிரேம்குமார், 

பெரியகுளம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%