திருவனந்தபுரம், அக்.30- வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தத் திற்கு எதிராக கேரளத்தில் நவம்பர் 5 அன்று அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முத லமைச்சர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது: கேரளம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (எஸ்ஐஆர்) அவசரமாக அமல்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது நமது நாட்டின் ஜனநாயக செயல்முறைக்கு சவாலாக அமைகிறது. இதன் ஆபத்தை சுட்டிக்காட்டி சட்ட மன்றம் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை நிறை வேற்றியது. அரசியல் கட்சி கள் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகளின் அறி வுறுத்தல்களைப் புறக் கணித்து எஸ்ஐஆர் செயல் படுத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற விருக்கும் நிலையில், இந்த முடிவை எதிர்க்க வேண்டும். இது தொடர்பான விச யங்கள் குறித்து விவாதிக்க நவம்பர் 5 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?