"அத்தாச்சி...அத்தாச்சி
அவசரமா எங்கோ போறிங்களா...சரி.....சரி,போகும் போது கூப்பிடக்கூடாது நல்லபடியா போயிட்டு வாங்க அப்புறமா வாறேன்னு" சொல்லிய படி திரும்பினாள் கற்பகம்
"நா எங்கே போகப் போறே ? கடைக்குத் தான் போறே ,உன் அண்ணன கட்டிக் கிட்டு நா பர்ற அவஸ்த பத்தாதுண்ணு நீ வேற நிம்மதியா இருக்க விட மாட்டிங்களா...
என்னடி விசயம் சொல்லு "என்று கமலா சிடு சிடுன்னு எரிந்து விழுந்தாள்
"என்ன அத்தாச்சி இப்பிடி பேசிபுட்டிக அத்தாச்சிக்கு என்மேல் கோபம் போலிருக்கு" ன்னு
கேட்டாள் கற்பகம்
விசயத்த சொல்லாம என்னடி புலம்புறே ன்னு கமலா கேட்க.
"தெருவுலயா சொல்ல கடைக்கு போயிட்டு வீட்டுக்கு வாங்க அத்தாச்சி பேசுவோம்" ன்னு சொல்ல,
"இனி வீட்டல வேறையா..உன்னைக் கண்டதும் உன் அண்ணனுக்கு சாமி ஆட்டம் வந்துரும் எதுனாலும் இங்கேயே சொல்லு "
"அண்ணன பார்த்து ரெம்ப நாளாச்சே ன்னு நெனச்சே "
"ரெண்டு நாளுக்கு முன்னாடி தானே வந்தே அதுக்குள்ளே வருச கணக்காச்சு ஏண்டி அப்பிடியே
முழு பூசனிக்காய சோத்துல அமுக்குறியேடி "
என கமலா பேச
"இல்ல அத்தாச்சி,
மகளுக்கு கல்யாண வச்சுருக்கேன்ல உங்க கிட்டே சொல்லி அண்ணேட்ட ஒரு ஐம்பதாயிரம் கடன் வாங்கிலாமுன்னு வந்தே அத்தாச்சி,"
"அதா சீதனம் வேணாம்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சொன்னாங்கன்னு சொன்னியேடி"
"அவங்க பெருந்தன்மையாசொல்லிட்டாக, கல்யாணம் முடிஞ்சதும் கட்டுலு,
மெத்தையின்னு கேட்டாங்கன்னா அப்போ பணத்துக்கு என்ன செய்யுறது அதாங்க முன் கூட்டியே பணம் இருந்தா டவுன்லேயே வாங்கி கொடுத்துடலாம் "
"நீ ! என்னடி பிரண்டு பேசுறே,போடி இவளே ,சீதனம் வேணாம்னு சொன்ன பின்னாடி சீர் செய்யுறால சீரு!"
"அதுசரி கடன்
கொடுக்குற அளவுக்கு பணம் என்ன மரத்துலய காய்க்குது ! ஏண்டி,?"
"இல்லே அத்தாச்சி,
உங்கள விட்டா.. எனக்கு யாரு இருக்கா "ன்னு கற்பகம் கேட்க
"இதென்னடி வம்பா போச்சு,யாரப்பாரு இதத்தாண்டி சொல்றிங்க ,சரி சரி,வீட்டோட பத்திரம்,உன் புருசே,நீ ,உன்மக,
சேர்ந்து எழுதி கையெழுத்து போட்டுக் கொடு"
கமலா என்று சொல்லவும்
கல்யாணம் முடிஞ்ச கையோட மொய் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்துறே ன்னு கற்பகம் சொல்ல,
"உனக்கு என்ன ஐய்யாயிரம்,பத்தாயிரமுன்னு மொய்யா செய்வாங்க,உள்ளுருல்ல வச்சாலும் ஏதோ இருநூறு, முன்னூறு ன்னு செய்வாங்க,நீ மாப்பிள்ளை ஊருல்ல கல்யாணம் அங்கெல்லாம் உனக்கு யாருடி வரப் போறா" கமலா சொல்ல
கற்பகம் யோசித்தாள் "குருவி சேர்க்கிற மாதிரி பணம் சேர்த்து கட்டுன சின்ன வீட்டையும் புடுங்க பாக்குறாளே
இந்த வீட்ட இவளுக்கு எழுதி கொடுத்துட்டா,எங்கே போறது"என்று கற்பகம் இருக்க,
"என்னடி நான் சொன்னத கேட்டு மலச்சு போய் நிக்கிற" என கமலா கேட்க
"இல்லே அத்தாச்சி மாமாட்டே கேட்டுட்டு வர்றே" என்று கற்பகம் வீட்டிற்கு திரும்ப,
"அடியே,வீட்டுக்கு சாய்ந்தரமா வா உன் அண்ணனுக்கு தெரியவேணா..
காரே வீட்டுக்காரர் கிட்டே சொல்லி பணத்துக்கு ஏற்பாடு பண்றே என்னடி" எனச் சொல்ல
"சரிங்க அத்தாச்சி
வாறே "ன்னு கண் கலங்கிய படி வீட்டிற்கு வந்தாள் கற்பகம்
கணவனிடம் எதுவும் சொல்லாமல் பணத் தேவையைச் சொன்னாள் கற்பகம்
வேல பாக்குற இடத்துலே சொல்லி உடனே கொடுத்துருவோம் என்றான் சுகுமார்
மகள் கல்யாணம் முடிந்து மகளை அழைத்து விருந்து வைத்து நல்ல முறையில் அனுப்பி வைத்து விட்டு வந்த மொய் பணத்தில் கடன் வாங்கியவர்களிடம் வட்டியோட திருப்பி கொடுக்க
"சொன்ன சொல் தவறாம பணத்த கொண்டு வந்ததால் வட்டி வேணா சுகுமார் மகள நல்லபடியா கல்யாணம் முடுச்சு அனுப்பி வச்சுட்டிலே அது போதும் போ இரண்டு நாள் கழிச்சு வேலைக்கு வந்துரு" என சொல்லவும் கண் கலங்கியபடி வந்தான் சுகுமார்.
"சொந்தங்கள் உதவாவிட்டாலும் அடுத்தவங்க உதவி செய்றதே போதும் "
என கற்பகத்திடம் சொன்னான் சுகுமார்
கல்யாணம் முடிந்து மாதமாகிய பின் கடைவீதியில் கமலா கற்பகத்தைப் பார்த்தவள்
"என்னாடி ஆளையே பார்க்க முடியல" என கேட்க
அத்தாச்சியா... வாங்க அத்தாச்சி
"என்னடி கற்பகம் எப்பிடி இருக்கே ?
மக கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுருச்சா..பணம் வேணும்னு கேட்டியே வீட்டுப்பக்கமே வரல "
என கமலா கேட்க
மாமா தா வேல பாக்குற இடத்துலே கேட்டாராம் எவ்வளவு வேணா வாங்கிக்கே சுகுமாருன்னு அம்பதாயிரம் கொடுத்தாங்க மகளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி கொடுத்து சிறப்பா முடுஞ்சுருச்சு அத்தாச்சி வந்த மொய் பணத்துல வட்டியோட கொண்டு போய் கொடுத்தாரு , அவரு மொதலாளி வட்டி எல்லாம் வேண்டாம் அசல கொடுத்தா போதும்னு வட்டிய திருப்பி கொடுத்துட்டாரு" என கற்பகம் சொல்ல
"அடப்பாவி மனுசா இப்பிடி ஏமாளியா இருப்பே ,நானா இருந்தா அஞ்சுக்கு ,
பத்து வாங்கி இருப்பேனே இம்.." என பெரு மூச்சு விட்டபடி மனசுல நினைத்தாள் கமலா
"என்ன அத்தாச்சி அப்படியே திகச்சிபோய் இருக்கீங்க" என்று கற்பகம் கேட்க,
"அண்ணனுக்கு வேஷ்டி ,சட்டை, சேலை துணிகள்,பணம், பாக்கு,தேங்கா,படத்தோட,பத்திரிகை,வச்சு கொடுத்தே,உன்மக கல்யாணத்திற்கு வரமுடியாம போச்சடி,"
என கமலா பேச்சை மாற்றினாள்
"பரவாயில்ல அத்தாச்சி,கல்யாணத்திற்கு யாரு வந்தாங்கன்னு பாக்க முடியல அத்தாட்சி" என்றாள் கற்பகம்
"அதுசரி அத்தாச்சி என்ன கடைப் பக்கம்" என கேட்டாள் கற்பகம்
"உனக்குக் தெரியாதோ..
சொல்ல வேண்டியதை சொல்லாமல் எதை எதையோ பேசிட்டே,
உன் அண்ணனுக்கு,
லோபிரஷராம் போக ,எழுந்தவரு தலை சுத்தி பின்பக்கமா விழுந்தாரு பின் மண்டையில அடிபட்டு ரத்தம் ஊத்திருச்சு,உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனோம், நேத்து தா,உன் அண்ணனே,கூட்டிட்டு வந்தோம் "என்று சொல்லவும்
என்ன அத்தாச்சி சொல்றிங்க,என பட படன்னு வந்தவளாய் வீட்டிற்கு திரும்பியவளை
"அடியே நில்லுடி! "
"அண்ணனே,உடனே பாக்கனும்னு" கமலா அழைத்ததையும் கேளாமல்,வேகமாக நடந்தாள் கற்பகம் .
கட்டிலில் தலையில் கட்டுடன் இருந்ததைப் பார்த்து அழுதாள் கற்பகம்
அழுகுரல் சத்தம் கேட்டு விழித்தார்
கற்பகமா..எனக் கேட்டார்
"அண்ணே உனக்காண்னே"
என்றாள் தேம்பி அழுதபடி கற்பகம்
"கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுருச்சா... மருமக கல்யாணத்திற்கு போகனும்னு பாத்ரூம்க்கு போக எழுந்தேன் தீடிர்னு நடந்திருச்சும்மா..."
என்றார்
"கற்பகம் எதுக்குடி அழுறே உன் அண்ணனுக்கு ஒண்ணுமில்லடி "என சமாதானப் படுத்தினாள் கமலா
"கற்பகம் மருமக வந்தா வீட்டுக்கு கூட்டிட்டு வாம்மா "
என்று சொன்னவரிடம்
"அண்ணே,நீங்க? நல்லபடியா குணமாகி வந்து என் மகளுக்கு ஆசிர்வாதம்
பண்ணும் "என்றாள் கற்பகம்
கொஞ்ச நேரம் அண்ணனையே பார்த்துக் கொண்டே இருந்தவள்
"அண்ணே,நல்லா தூங்குறாரு நான் வீட்டுக்கு போயிட்டு அப்புறமா வாறேன்னு" சொல்லிவீட்டிற்கு கிளம்பிச் சென்றாள் கற்பகம்
கற்பகத்தின் மகள் சென்னைக்கு குடி போவதாகச் சொல்ல கற்பகம் குடும்பத்துடன் சென்னை சென்று ஒரு மாதம் கழித்து வீடு திரும்பினாள்
கற்பகம் சென்ற மறுநாளே அண்ணன் அடிபட்ட தலையில் இருந்து ரத்தகசிவு ஏற்பட்டு இறந்து போனார் ,அவருக்கு செய்ய வேண்டிய காரியங்கள் முடிந்ததும் ,அவர் மகன்கள் சொத்தை சமமாக பிரித்துக் கொண்டு நகரத்துப் பக்கமாக சென்று விட
கமலாவிற்கு மாதம் அய்யாயிரம் கொடுப்பது என பேசி சிறிய வீட்டை வாடகைக்கு பிடித்து கமலாவை குடி இருக்க வைத்து வீட்டு சென்று விட்டனர்
கமலா தெருவையே ஆட்டி படைத்தவர் இன்று தனிமரமாய் நினைத்து நினைத்து வருந்தி,கடவுளிடம் சொல்லி முறையிட்டாள் கமலா
கமலா கோவில் வளாகத்தில் தனியே அமர்ந்திருந்தாள்.
அப்போது விநாயகரை வழிபட்டு திரும்பிய கற்பகம் கமலாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.
அத்தாச்சி..... என அருகில் வந்தாள் கற்பகம்
கற்பகத்தைப் பார்த்ததும் முகத்தை மூடிக் கொண்டு அழுதாள் கமலா
"என்ன அத்தாச்சி இது கோலம் "என ஆதங்கமாய் கேட்டாள் கற்பகம்.
"சரி அத்தாச்சி எழுந்திருச்சு வாங்க அத்தாச்சி வீட்ல போய் பேசுவோம்" என கமலாவை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள் கற்பகம்
ஆட்டோ பிடித்து வீட்டிற்கு அழைத்து வந்தாள் கற்பகம்
நடந்த நிகழ்வுகளை அழுத கண்ணீரோடு சொல்லி முடித்தாள் கமலா
"ரோட்டிற்கு எதிரே இரண்டு தெரு தள்ளி இருப்பதால் எனக்கு எதுவுமே தெரிய மாட்டிங்குது நீங்களும் இந்தப் பக்கம் வரவும் மாட்டிங்க "என்றாள்
கற்பகம்
"அத்தாச்சி இனிமே உங்க வீடு ,நீங்க எங்கையும் போக வேணாம் இங்கேயே இருங்க,"என்று கற்பகம் சொல்ல
கற்பகத்தையே, பார்த்தாள் கமலா
"கற்பகத்தை சொந்த அண்ணன் கிட்டேயே அண்ட விடாம விரட்டி,
சொத்துக்களை பறிச்சி அனாதையா ஊரை விட்டு விரட்டனும்னு நினைச்சே, ஆனா, கற்பகம் ஆதரவா பேசி அரவனச்சா,! அவ எங்கே! நா எங்கே? "என கண்ணீர் சிந்தி வருந்தினாள் கமலா
நல.ஞானபண்டிதன்
திருப்புவனம் புதூர்