நாமக்கல் கோ-ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி விற்பனை ரூ.90 லட்சம் இலக்கு
Sep 19 2025
33

நாமக்கல், செப். 20-
நாமக்கல் மாவட்டத்தில் கோஆப்டெக்ஸ் ஷோரூமில், ரூ. 90 லட்சம் தீபாவளி சிறப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் துர்கா மூர்த்தி கூறினார்.
நாமக்கல் கோ ஆப்டெக்ஸ் ஷோரூமில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி குத்துவிளக்கேற்றி, தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விழா காலங்களில், 30 சதவீதம் வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்காக புதிய வடிவமைப்புகளில் அசல் ஜரிகையுடன் கூடிய காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், சேலம், தஞ்சை பட்டு புடவைகள் மற்றும் புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன.
பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவ வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு, நாமக்கல் மாவட்டத்தில் கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு, ரூ. 90 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோ -ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து, மாதந்தோறும், ரூ. 300 முதல், 3,000 வரை சேமித்து, இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். தீபாவளி சிறப்பு தள்ளுபடியாக, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு, வட்டியில்லா கடன் வசதியில், 30 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோ- ஆப்டெக்ஸின் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மேலாளர் பாலசுப்ரமணியன், நாமக்கல் விற்பனை நிலைய மேலாளர் செல்வாம்பாள், ஓய்வு பெற்ற மேலாளர் ஆறுமுகம், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?