நிழல் உலக தாதா அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா

நிழல் உலக தாதா அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா


 

வாஷிங்டன்: இந்​தி​யா​வில் தேடப்​பட்டு வரும் நிழல் உலக தாதா அன்​மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்​தி​யர்​களை அமெரிக்கா நாடு​ கடத்​தி​யுள்​ளது.


அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்​பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்​ட​விரோத​மாக குடி​யிருப்​பவர்​களை நாடு கடத்​தும் நடவடிக்​கையை தீவிரப்​படுத்த உத்​தர​விட்​டார். இதைத் தொடர்ந்து அங்கு சட்​ட​விரோத​மாக வசித்து வந்த இந்​தி​யர்​கள் ஆயிரக்​கணக்​கானோர் இது​வரை நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர்.


இந்​நிலை​யில், இந்​தி​யா​வில் தேடப்​படும் நிழல் உலக தாதா​வான அன்​மோல் பிஷ்னோய் உள்பட 200 இந்​தி​யர்​களை அமெரிக்கா நாடு​கடத்​தி​யுள்​ளது. இவர்​கள் அனை​வரும் நேற்று டெல்லி இந்திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்தை வந்​தடைந்​தனர். நிழல் உலக தாதா​வான லாரன்ஸ் பிஷ்னோ​யின் சகோ​தரர்​தான் அன்​மோல் பிஷ்னோய் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


தாதா லாரன்ஸ் மீது மகா​ராஷ்டிரா அமைச்​சர் பாபா சித்திக்கியை கொலை செய்த வழக்​கு, நடிகர் சல்​மான் கான் வீட்டுக்கு வெளியே துப்​பாக்​கிச் சூடு நடத்​திய வழக்கு உள்​ளிட்ட பல்​வேறு வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இவருடைய சகோதரரான அன்மோல் பிஷ்னோய் போலி ஆவணங்​கள் மூலம் அமெரிக்​கா, கனடா உள்​ளிட்ட நாடு​களுக்கு மாறி மாறி பயணம் செய்​தது போலீ​ஸாருக்கு தெரிய​வந்​தது. பாபா சித்​திக்கி கொலை வழக்கில் அன்​மோல் பிஷ்னோய்க்​கும் தொடர்​பிருப்​பதை போலீஸார் உறுதி செய்​துள்​ளனர்.


இந்​நிலை​யில்​தான் அன்​மோல், கடந்த ஆண்டு கலி​போர்​னி​யா​வில் கைது செய்​யப்​பட்​டார். அதன் ​பின்​னர் அவருக்கு போலீ​ஸார் ஆங்க்​கிள் மானிட்​டர் எனப்​படும் கண்​காணிப்​புக் கரு​வியை பொருத்​தினர். இது ஜிபிஎஸ் பொருத்​தப்​பட்ட கரு​வி​யாகும். இதன்​மூலம் கைதான நபர்​கள், ஜாமீனில் வெளிவந்​தா​லும்​ கூட அவர்கள் செல்​லும் இடங்​களை போலீ​ஸா​ரால் கண்​காணிக்க இயலும். இது கருப்பு நிறப் பட்​டை​யாக இருக்​கும். இதனை, உடலில் இருந்து அவ்​வளவு எளி​தாக அகற்ற இயலாது.


அண்​மை​யில் அன்​மோல் பிஷ்னோயை பிடிப்​ப​தற்​காக மகாராஷ்டிர போலீ​ஸார் ரெட் கார்​னர் நோட்​டீஸை வெளியிட்டிருந்​தனர். இந்​நிலை​யில்​தான் அவர் தற்​போது அமெரிக்​கா​விலிருந்து இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டுள்​ளார். அன்​மோலின் சகோ​தரர் லாரன்​ஸ் பிஷ்னோய் தற்​போது அகமதாபாத் சபர்​மதி மத்​திய சிறைச்​சாலை​யில் அடைக்கப்பட்டுள்​ளார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%