நீலகிரியில் அக்டோபர் 8,9 தேதிகளில் தமிழ் வளர்ச்சித்துறை நடத்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்

நீலகிரியில் அக்டோபர் 8,9 தேதிகளில் தமிழ் வளர்ச்சித்துறை நடத்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள்


நீலகிரி, அக். 1–


தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர் களுக்குப் கவிதை, கட்டுரைப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பெற்று வருகின்றன.


அதன்படி அக்டோபர் 9ந் தேதி 11,12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் 8ந் தேதி கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும் சி.எஸ்.ஐ.(சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பெற உள்ளன.


இப்பேச்சுப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் 11,12ஆம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் வாயிலாக தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரிடமிருந்து கட்டாயம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும்.


கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் வாயிலாக தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் கட்டாயம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். பள்ளிப் போட்டிகளுக்கு ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.


கல்லூரிப் போட்டிகளுக்கு ஒரு கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு இரண்டுபேர் வீதம் 6 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள். வெற்றி பெறும் மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000 இரண்டாம் பரிசு ரூ.7,000- மற்றும் மூன்றாம் பரிசு ரூ.5,000- என்ற வகையில் பரிசுத்தொகைகள் வழங்கப்பெற உள்ளன. போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பெறும். போட்டிக்கான தலைப்புகள், நடுவர்கள் மற்றும் மாண வர்கள் முன்னிலையில் எடுத்து அறிவிக்கப்படும். இப்போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%