முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 81,792 பேருக்கு வீடு தேடி ரேசன் பொருட்கள் விநியோகம்

ஈரோடு, அக். 1–
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசிய குடிமைப் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுகிறது.
இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் திட்ட வாகனங்களின் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 70 வயதுக்கு மேற்பட்ட 79,057 முதியோர்கள், 2,735 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 81,792 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். 1,263 நியாயவிலைக் கடைகளுடன் இணைந்து, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், மின்னணு எடைத்தராசு மற்றும் பிஓஎஸ் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலமாக வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மக்களின் வாழ்வாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கான இந்தத் திட்டம், நலிவுற்ற பிரிவினருக்கு பெரும் உதவியாக உள்ளது.
சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பயனாளி பேபி கமலம் கூறும்போது, “முதியோருக்கான சிரமத்தைப் போக்கி, வீட்டிலேயே அத்தியாவசிய பொருட்களை வழங்கும் இந்தத் திட்டம் எங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக உள்ளது. முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி” என்றார்.
அதேபோல், புதுக்கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் கூறும்போது, “நடக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில் ரேஷன் வாங்க வரிசையில் நிற்பது கடினமாக இருந்தது. இப்போது பொருட்களை வீட்டிலேயே அளிக்கின்றனர். முதல்வரின் தொலைநோக்கு சிந்தனைக்கு நன்றி” என்றார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?