நீ வருவாய் என

நீ வருவாய் என


நீ வருவாய் என நம்பி தான் விலகுகிறேன்.

நீ அழைப்பாய் என்ற நம்பிக்கையில் தான் கடந்துபோகிறேன்.


உன் மனதில் நான் உள்ளேன் என

நம்பி தான் கொஞ்சம் மெத்தனம் காட்டினேன்;

உரிமை இருக்கிறது என நம்பி தான்

சிறு கோபங்களை வெளிப்படுத்தினேன்.


இனி பேசுவதில்லை என 

முடிவு எடுத்துவிட்டாயோ?

எனக்கு தெரியாது…

ஆனால் நீ மௌனமாக இருக்கும் ஒவ்வொரு நொடியிலும்

உன் குரல் கேட்காமல் நான் இறந்து கொண்டு இருக்கிறேன்..


சில தூரங்கள்

நெருக்கத்தை உருவாக்கும் என நினைத்தேன்,

ஆனால் நீ ஏற்படுத்தும் தூரம் மட்டும்

என்னை மறைக்க தொடங்கியுள்ளது.


நீ தவற விட்டாய் என

நான் ஒருபோதும் சொல்லப் போவதில்லை;

ஏனெனில் உன் ஒரு பார்வைக்காக 

நான் ஆயிரம் முறை

உன்னை மன்னிக்க தயார்.



புரியாத சிக்கல்கள் உனக்குள் இருக்கிறதோ?

அல்லது என்னுள் இருக்கிறதோ?

இன்னும் புரியவில்லை;

ஆனால் உன் நினைவு மட்டும்

என் மனதில்

மலர் போல பூத்துக் கொண்டிருக்கிறது.


நீ திரும்பவில்லை என்றால்?

 நான் உன்னை கடந்து விடுவேன்—

ஆனால்

நீ திரும்புவாய் என்ற நம்பிக்கையில்

இன்னும் மனக் கதவை

 திறந்தே வைத்திருக்கிறேன்…


 சிலருக்கான காத்திருப்பு

வலியாக இருந்தாலும்

அந்த காத்திருப்பு அவசியமானது..

ஏனெனில்

காதல் காத்திருப்பில் தானே

தொடங்கியது ..


---

ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%