நெருப்பு என்றால் சுடுமா?

நெருப்பு என்றால் சுடுமா?


நெருப்பென்று சொல்ல

     நேர்வதால் வார்த்தை

நெருப்பாகச் சுடாது

      'உண்மையே' எனினும்

பொறுப்புடன் வார்த்தை

      பொறுமையாய் எடுத்து

இருப்பதைக் கவனமாய்

      உகுக்க வேண்டும்!

 பொறுப்புடன் உதிர்க்கும்

      ஒவ்வொரு வார்த்தையும்

மறுத்திட முடியாது

     மறக்கவும் முடியாது

சொல்லுக்கு உயிருண்டு

    சொல்வதை கவனமாய்

நல்லதாய் சொல்லுங்கள்

      சுவைபடச் சொல்லுங்கள்!!



வைரமணி 

சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%