பக்தியும் பாசமும்

பக்தியும் பாசமும்


திருப்பலி நேரம்.

அலைமோதும் சபை நடுவே பீட சிறுவர்கள் சிலர் தப்பித்தவறி நடந்தார்கள்.

அவர்களை பங்குத்தந்தை கடுமையாக சாடினார்.

கண்களில் வெள்ளம் போல கோபம் பங்குத்தந்தை யிடம்.


இதனை கவனித்த ராபர்ட் க்கு உடம்பெல்லாம் படபடவென இருந்தது . பங்குத் தந்தையின் பிரசங்கத்தில் கவனம் செல்லவில்லை பீட சிறுவர்களை அவர் கடிந்து கொண்டே இருப்பதுதான் ராபர்ட் மனதில் வந்து கொண்டே இருந்தது.


“அதான் சொல்லி இருக்கேன்... இந்த பங்குத்தந்தை இப்படித்தான்...!”

என்று மனத்தில் கடுப்பாக குமுறிக்கொண்டே இருந்தான்.

ஒரு கட்டத்தில் திருத்தந்தை இடத்தில்

 கேட்க மனது துடித்தது.


திருப்பலி முடிந்ததும்,

நேராக பங்குத்தந்தையின் அறை நோக்கி சென்றான்.

மனதில் கோப துடிப்பு.


அந்த அறை கதவு சிறிது திறந்திருந்தது.

அவனது காலடிச் சத்தம் யாரும் கவனிக்கவில்லை.


அங்கிருந்து சிறுவர்களின் சிரிப்பு கேட்கப்பட்டது.


"இன்னிக்கு உங்களுக்கு Fine உண்டு பாதர்!"

"பிரியாணி வாங்கித்தந்தாகனும்!"

"அப்படியென்றால்… மாமுல விட அதிகமாக மசாலா முட்டை உடன் ஸ்பெசல் பிரியாணி பாதர்!"


அவர்களுக்கிடையே இன்னும் ஓர் சிறுவன் குரல்:

> “நீங்க திட்டும் போதெல்லாம் கோபம் வருது பாதர் என்ன நீங்க பாட்டுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் திட்றீங்க அடிக்க வரீங்க"


"

நீங்கபடிச்சு நல்லா கடவுள் பிள்ளைகளா வரனும் னு தான் திட்டுறேன். தெரியும்ல கடவுளுக்கு ஊழியம் செஞ்சா தான் படிப்பு வரும் ! ஆனாலும் அதுக்காக இன்றைக்கு டபுள் பனிஷ்மென்ட் எனக்கு போடாதிங்கடா

 பிரியாணியும் முட்டையும் அதான் ஞாயிற்றுக்கிழமை சாப்பிடறோம் இல்ல"


"நீங்க திட்டினால் டபுள் பனிஷ்மென்ட் உண்டு வாங்கி தாங்க" உரிமையாய் ஒரு சிறுவன் அவர் தோளில் தொங்கிக் கொண்டு சொன்னான்.


அதையெல்லாம் கேட்ட ராபர்ட், கதவோரம் நின்றவாறே ஒரு நிமிடம் குனிந்தான்.


அவர்கள் உறவு…

அதில் கோபம் இல்லை,

கல்வியோடும், பாசத்தோடும் கூடிய உறவுத் தொடர்பு.

ஒரு பக்கம் பங்கு தந்தை திறம் கடுமை. மறுபக்கம் நண்பர் போல நெருக்கம்.


அறையில் நுழையாமல் மெதுவாக திரும்பி சென்றான் ராபர்ட்.

மனத்தில் ஒரு புதிய திருப்பம்…


“அன்பு இருந்தால் அதன் திட்டமும் ஆசிர்வாதத்துடன் கூடிய நன்மையாகத்தான் இருக்கும்.” என புரிந்தான் 


அவரவருக்கான உலகத்திற்குள் அவர்கள் அவர்களாகவே வாழ்கிறார்கள் ஓரமாய் நின்று எட்டிப் பார்ப்பவர்களுக்கு எதுவும் புரியாது என்பதை உணர்ந்து ராபர்ட் சிலுவை போட்டுக் கொண்ட ஆண்டவருக்கு நன்றி சொல்லி தேவாலயத்தை கடந்தான் 


---


✍️ ஜனனி அந்தோணி ராஜ்,

திருச்சி


---

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%