பனைமரங்கள்

பனைமரங்கள்


------------------------------

வெயிலுக்கும்

மழைக்கும்

அபயம் அளிக்காத

வெற்றுக்குடைகள்!


பூதனையின்

மறு அவதாரங்கள்

கண்ணனுக்கு கொடுத்த பாலின்

எச்சத்தைக் கொங்கைகளுக்குள்

ஒளித்துக்கொண்டதால் தான் நுங்குகள் அமிர்த

கலசங்கள் ஆனதோ!


இங்கே

நூலகங்களில்

இருக்கும் புத்தகக்

குழந்தைகளுக்கு உங்கள் ஓலைச்சுவடிகளே

ஆதிக்கருவாய்ச்சூல் கொண்டு அறிவு களஞ்சியங்களை

உருவாக்கின!


நெட்டையானவர்களுக்கு உவமையாகும் நீங்கள் தன்மானச்

சின்னங்களாய்த்

தலைநிமிர்ந்து

நிற்கிறீர்கள்!


என்னவரம் வேண்டிக்

காலங்காலமாய்க்

கானகத்தில்

ஒற்றைக்காலில்

தவமிருந்து

காத்திருக்கிறீர்கள்!


கவிஞர் த.அனந்தராமன்

 துறையூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%