
பளிங்கு போன்ற வதனம் அதைப் பார்த்தாலே மனதுக்குள் பரவசம் ..
அந்த வதனத்தில் அதரம் விரிய சிரிப்பது ஒரு வனப்பு
விண்ணில் மின்னும் தாரகை போல் வதனம் மின்னுகிறதே ...
வெண் முகில்கள் வட்ட மிடும் வானத்தில் தான் நட்சத்ரம் தெரியும் என்று இல்லாமல் உன் வதனத்திலும் நட்சத்திர புன்னகை தெரிகிறதே....
அந்தி சாயும் ஒளியில் மினுமினுக்கும் தோற்றம்,
சிவந்த வானில் பிரதி பலிக்கும் — உன் அழகு வதனம் .
பார்வை ஒன்று போதும் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறதே.....,
பாசமெனும் காதலில் விழுந்து விட்டேன்.
அழகின் சிகரம் நீ — வானில் உலாவரும் வெண்மதி நீ
பளிங்கு முகம் போல — என்றும் மனதில் குடி கொண்டதே....
உஷா முத்துராமன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?