பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு முடிவு: சண்டை நிறுத்தம் உடனடியாக அமல்
Oct 20 2025
10

தோஹா, அக். 19–
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ் தானுக்கும் இடையிலான மோதல் சமரசம் முடிவுற்று சண்டை நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருவதாக சமரசம் செய்யும் கத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தாரும் துருக்கியும் தோஹாவில் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இரு நாடுகளின் பிரதிநிதிகளும் சென்றனர். இதன் பயனாக இந்த உடன்படிக்கைக்கு நேற்று சனிக்கிழமை இரவில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் முல்லா முஹம்மது யாக்கூப் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட 48 மணி நேர சண்டை நிறுத்த ஒப்பந்தம் முடிவுற்ற பின், நேற்று முன் தினம் நள்ளிரவு மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்களில் அந்நாட்டின் வளிரளம் கிரிக்கெட் வீரர்களான கபீர் அகா, சிப்காதுல்லாஜ், ஹரூன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
சர்வதேச அளவில் கண்டனத்தை ஈர்த்துள்ள இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, இதைக் கண்டித்து அடுத்த மாதம் நடைபெறும் இலங்கை, ஆப்கான், பாகிஸ்தான் நாடுகளின் தொடரிலிருந்து ஆப்கன் வெளியேறுகிறது என்றும் ஆப்கன் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இரங்கலும் தெரிவித்திருக்கிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?