
மேகமாய்ப் பொழிந்துவந்த
மாயக்குரல்.
காற்றினிலே தேன் தடவிய
காந்தக் குரல்.
மூச்சொல்லாம் பாட்டாகிப்
பொழிந்த முகில்.
முகவரியே இசையாக
இருந்த குயில்.
மென்மனதின் ஓரங்களை
மயிலிறகால் தடவி
செல்லமாகச் சொல்லெடுத்து
உயிர் ஊடுறுவி
தேன் வெள்ளமாகப் பாய்ந்து வந்தச்
சுருதியின் அருவி
ஏன் மௌனமாகப் பிரிந்ததுவோ
சலனம் அடங்கி.
மரணத்தின் நீளங்களில்
சரணம் பாடி
காலதேவனையே
மயக்குகிறான்
கலையில் மகன்.
உலகமுள்ள நாள்வரைக்கும்
உன் குரல் ஒலிக்கும்.
எங்கள் காதுமடல் ஓரங்களைக்
கெளரவித்து மணக்கும்.
*நறுமுகை.*
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%