வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி] 25.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி] 25.09.25



ஒரு புகழ்பெற்ற ஜென் துறவி தன் சீடர்களோடு உரையாடிக் கொண்டிருந்தார்.


தன் சீடர்களின் திறனை சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் திடீரென்று அவருக்கு தோன்றியது. உடனே காரியத்தில் இறங்கினார்.


குடிசைக்குள் போனார்.

ஒரு மட்பானையை எடுத்து வந்தார்.

சீடர்கள் அனைவரும் திகிலோடும் திகைப்போடும் கண்களில் ஆவல் கொப்பளிக்க பார்த்தார்கள்.


முதலில் ஒரு சீடனை அழைத்தார்.

தன் முன்னால் வந்து நின்ற சீடனிடம் பானையைக் காட்டி,

' இது என்ன' என்று கேட்டார்.


மண்ணால் செய்த பானை என்று பவ்யமாக சொன்னான் அவன்.


சரி என்று தலை அசைத்து விட்டு,

பானையை தலை குப்புற கவிழ்த்து காட்டினார், ஜென்.


' இந்த பானையில் என்ன இருக்கிறது?'

சீடனிடம் கேட்டார்.


" ஒன்றும் இல்லை ஐயா" என்றான் சீடன்.


" இல்லை... தப்பான பதில்..." என்று மறுதலித்து விட்டு, அங்கே அமர்ந்திருந்த 

மற்ற சீடர்களைப் பார்த்தார்.


" உங்களில் யாருக்காவது, இதில் என்ன இருக்கிறது என்று தெரியுமா?"


சத்தம் போட்டு கேட்டார். கொஞ்ச நேரம் நிசப்தம் நிலவியது. யாரும் வாய் திறக்கவில்லை.


சிறிது நேரம் கழித்து ஒரு சீடன் மட்டும் எழுந்து, " நான் சொல்கிறேன் " என்றான்.


" பானைக்குள் காற்று உள்ளது "


" சபாஷ்... சரியான விடை " என்றார் ஜென்.


" இன்னொரு கேள்வி...

இந்த காற்றை பானையில் இருந்து போக்க என்ன வழி... சொல் பார்ப்போம்?"


அந்த புத்திசாலி சீடனே வாய் திறந்தான்:


" சொல்லுவதை விட செய்து காட்டலாமா குருஜீ?" குனிந்தவாறே

கேட்டு, அவரின் பதிலுக்காக வேண்டினான்.


" ஓ... தாராளமாக..."


குடிசைக்குள் அந்த சீடன் போனான். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து, அந்த 

பானையில் ஊற்றி விட்டு சொன்னான்:


" குருவே... தண்ணீர் ஊற்றியதும் பானையில் இருந்த

காற்று எல்லாம் பறந்தோடி விட்டது"


" சபாஷ்... சபாஷ் " என்று சந்தோஷத்தில் அந்த சீடனை பாராட்டி 

மகிழ்ந்தார் ஜென்.


இத்தோடு இந்தக் கதை முடிந்தால், சுவையில்லை. சாரம் இல்லை. சுவாரஸ்யம் இல்லை.


சீடர்களைப் பார்த்து, 

" இந்தப் பானை கதை நமக்கு உணர்த்தும் பாடம் என்ன தெரியுமா?


பானைக்குள் இருந்த காற்றை தண்ணீர் எப்படி வெளியேற்றியதோ,

அதைப் போல கெட்ட எண்ணங்களால் நிரம்பி போயிருக்கும் 

நமது மனதில், நல்ல எண்ணங்களை தண்ணீர் ஊற்றியதை

போல், நிரப்பினால் 

மனம் சுத்தமாகும்.

தீய -- கெட்ட எண்ணங்கள் காணாமல் போய் விடும் "


இந்த ஜென் கதையை இப்போது இங்கே சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.


உங்கள் கேள்விக்கு நியாயமான பதில் இருக்கிறது.


அன்பான வாசக சொந்தங்களே!

நமது தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் சார்பாக வெளிவரும் அருள் தரும் தெய்வம் செப்டம்பர் 22 தேதியிட்ட இதழை முழுவதும் படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்.


நமது உள்ளத்தில் தெய்வம் இதழின் கட்டுரைகள் வழங்கும் 

அதி அற்புதமான கருத்துக்கள் பதியும் போது நாம் தானாகவே 

பண்படுகிறோம்.

பக்குவப் படுகிறோம்.


தெய்வம் இதழின் வாசிப்பனுபவம் எனக்களித்த பேருணர்வை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன்.


எதையும் ஆய்ந்தறிந்து 

உள் வாங்கும் வல்லமைப் பண்பு மிக்கவர்களான நமது வாசக சொந்தங்கள் 

மேலும் மேலும் தங்களை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் நிரம்ப இருக்கின்றன.


நாம் பெற்ற இந்த மாசில்லாத இன்பத்தை நமது நட்பு, உறவுகளும் பெற்றிட வேண்டும் என்று தொடர்ந்து இயங்குவோம்.

நல்ல காரியம் ஆற்றிய திருப்தியைப் பெற்றிடுவோம்.

தெய்வம் இதழின் வளர்ச்சிக்கு உறு துணையாக இருந்து 

பேருதவி புரிந்து 

பெருமிதம் காண்போம்!


பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%