பிறந்த நாளில் பொரித்த மீன், சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட 6 வயது குழந்தை உயிரிழப்பு

பிறந்த நாளில் பொரித்த மீன், சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட 6 வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை, செப். 25–


பிறந்த நாளில் சென்னை கடற்கரையில் பொரித்த மீன், சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன். இவரது மனைவி பதுமேகலா. இந்த தம்பதியின் மகள் சஞ்சனா ஸ்ரீ (வயது 6). தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில வருடங்களாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அவர், வடபழனி, மன்னார் முதல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் மனைவியும் தங்கி இருந்து கவனித்து வந்தார். இதனால் சஞ்சனா ஸ்ரீ, ஈரோட்டில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தாள்.


கடந்த 2 நாட்களுக்கு முன்பு சஞ்சனா ஸ்ரீக்கு பிறந்தநாள் ஆகும். இதனால் ஈரோட்டில் இருந்து பெற்றோரை பார்ப்பதற்காக உறவினருடன் சென்னை வந்தார். பதுமேகலா, மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவளை கடற்கரைக்கு அழைத்து சென்றார். அங்கு பொரித்த மீன், சிக்கன் பிரைடு ரைஸ் ஆகியவற்றை மகளுக்கு வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் வீட்டுக்கு வந்தனர்.


அப்போது சஞ்சனா ஸ்ரீக்கு காய்ச்சல் இருந்தது. இதனால் அவளுக்கு மருந்து கொடுத்து தூங்க வைத்தார். மறுநாள் காலையில் மகளை எழுப்பியபோது எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தாள். அவளது வாய், மூக்கில் ரத்தம் கசிந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டது என தெரிவித்தனர்.


இதுபற்றி தகவல் அறிந்துவந்த வடபழனி போலீசார் சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


குழந்தை இறந்த சம்பவம் பெற்றோர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%