அமைதி? ஒரு போதும் இல்லை
அடைப்பட்ட சாக்கடைகள்
பொங்கும் கழிவுநீர்த்தொட்டிகள்
கரையும் குடிசைகள் அழுகும் பயிர்கள்
மூழ்கிய கார்கள்
இல்லாத இன்சூரன்ஸ்
வீழ்ந்த மரங்கள்
உடைந்த சுவர்கள்
நூறடி சாலைகளில் ஒத்தையடிப் பாதைகள்
போட்டிப் போட்டுப் பேட்டிக் கொடுக்கும்
அரசியல் வாதிகள் சமூக ஆர்வலர்கள்
தொலைக்காட்சியில் தவிர பார்த்திராத மக்கள்
உயிரழப்பு, தொலைந்து போவது மட்டுமே
மக்கள் கண்டதாக அறியப்படுவது வாடிக்கை
உணவுப் பொட்டலம் துணிமணி பாதியும்
வீடியோவில் மட்டுமே என்பர் பாதிக்கப்பட்டவர்
உதவிகளில் விளம்பரம் தேடும் உன்னதம்
இன்னும் என்னென்ன சொல்ல?
வி.பிரபாவதி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%