வாழ்வில் நாம் மௌனம் கடைபிடிக்க வேண்டிய சிறந்த தருணங்கள்....
மனைவியிடம் சண்டையிடும் போது...
நீங்கள் வாய் திறக்க நேரிட்டால்... இறந்த பாட்டன் , முப்பாட்டன் வரை பிரச்சனையை இழுத்துச் செல்லும் நிலையை அடைய நேரிடும்...
எனவே அங்கு மவுனம் காப்பது தலை சிறந்த கடமை !
கோபம் வரும்போது பல்லை கடித்து மௌனத்தை கடைபிடியுங்கள்...
கோபத்தை அடக்க சிறந்த தருணம் இதுவும் ஒன்றே...
மது கூடத்தில் மது அருந்திவிட்டு மெளனமாய் இருப்பது சாலச் சிறந்தது....
ஏனெனில் மது... நம் மனதில் புதைத்து வைத்திருந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரும் மாயாஜால மருந்து....
வாட்ஸப்பில்... உண்மை கதைகளை சொல்கிறேன் என்று உங்கள் சோகக் கதைகளை சொல்லப்போனால் அது பலரும் சிரிப்பதற்கே வாய்ப்பளிக்கும்...
எனவே எங்கும் மௌனமே சிறந்த மொழி !
_____________________
எம்.பி.தினேஷ்.
கோவை - 25
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?