பெரும்பிழை

பெரும்பிழை


படிக்கப் போகிறவர்களை

பாடையில் அனுப்பிவிட்ட

பெற்றோர்களே...


பிள்ளையை தோளில் 

தூக்கி வைத்து

சாமியை கட்டியதை

பிள்ளை நினைவு கூறுவான்.


பிள்ளைகளையே

சாமியாக்கிவிட்ட உங்களை

இந்த உலகம் மறக்காது

பெற்ற பிள்ளையை

கொன்ற கொலைகாரர்களென்று.


கூடிய கூட்டத்தைப்

பார்த்த பின்னாவது

திரும்பியிருக்க வேண்டாமா?

திரும்பாத இடத்திற்கு

பிள்ளையை அனுப்பி

பெரும்பிழை செய்து விட்டீர்களே.



*- ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%