
மகாநதி போல என் எண்ணங்கள்,
எழுத்துக்களும் வார்த்தைகளும்—
பெரு வெள்ளம்;
எந்தக் கட்டுப்பாடும் ஏற்காது
திசை காட்டும் காட்டாறைப் போல்
கண்டதையும் கொண்டதையும் அடித்து செல்கின்றன.
நன்மை தீமை
லாப நஷ்டம்
பாதிப்பு பயம்—
எதையும் கணக்கிடாது
என் பேனா ஓடுகிறது.
ஆனால்
சிற்றாறாகப் பிரியும் போது,
மெல்லிய பாதைகள் தேடி
விவசாய நிலங்களை மகிழ்வித்து
ஏழை மனங்களை தழுவி
பாலின் இனிமை போல
பசியை அணைக்கிறது.
சிற்றாறை அடக்க நினைக்கும்
அகந்தையர்கள் வந்தாலும்
அது தானே வழி கண்டடையும்;
சரியான நேரம்,
சரியான பக்குவம்—
அது தேடும் மரபில்
ஒரு “வரப்பை” வெட்டுபவர் போல்
எழுத்தாளன் உள்ளம்
தன் ஓட்டத்தை மாற்றிக் கொள்கிறது.
மடைமாற்றம் கிடைக்கும் போது
எண்ணம் தெளிவாகிறது;
புதிய பாதையில்
புதிய விளைச்சல்.
ஆகவே என் பேனையின் வெள்ளம்
பல சிற்றாறாகப் பிரிந்து
சின்ன சின்ன உயிர்களுக்கு
நன்மை ஊட்ட,
நாளைய தலைமுறைக்கு
நல்ல நீராகப் பாயட்டும்.
எனக்குள் நிற்கும்
சிற்றாறுகளே—
நான் சொல்ல வேண்டிய இடம்
இங்கே தான்.
மகாநதியின் பெரு ஓட்டத்தில்
என் பேனா
இன்னும் வேகமாக
முழங்குகிறது.
--------
ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?