மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.174 கோடியில் கட்டிடங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார் ரூ.20 கோடி கட்டிடங்கள் கட்ட அடிக்கல்

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.174 கோடியில் கட்டிடங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார் ரூ.20 கோடி கட்டிடங்கள் கட்ட அடிக்கல்



சென்னை, அக்.6–


மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.173.81 கோடி செலவிலான மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.20.15 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, தஞ்சாவூர், சேலம், பாளையங்கோட்டைஉணவுப் பகுப்பாய்வு கூடங்களில் 24 கோடி ரூபாய் மதிப்பில் நிறுவப்பட்டுள்ளஅதிநவீன உபகரணங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் காட்பாடி அரசு மருத்துவமனை, பழனி மாவட்ட தலைமை மருத்துவமனை, திருப்பத்தூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, கூடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, சங்கராபுரம் அரசு மருத்துவமனை, மேலூர் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் 108 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்கள்,


தென்காசி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர்ஆகிய இடங்களில் 42 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்டமருந்துகிடங்குகள், மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் 1.49கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஆய்வகக் கட்டடம்,


சென்னையில் 14.85 கோடி ரூபாய் செலவில் புதிய மருந்து கட்டுப்பாடு நிர்வாக இயக்கக கட்டடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 லட்சம் ரூபாய் செலவில் உதவி மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அலுவலகக் கட்டடம், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தில் சார்பில் 6 கோடியே 22 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் சார்பில் 20 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் மருந்துக் கட்டுப்பாடு இயக்கத்திற்கு 14 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – வாலாஜாபாத் வட்டம், ஊத்துக்காட்டில் 75 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உதவி மருந்துக் கட்டுப்பாடு இயக்குநர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருந்து கட்டுப்பாடு இயக்குநர் ஆர்.லால்வேனா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், ஓமியோபதி ஆணையர் எம்.விஜயலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


காணொலிக் காட்சி வாயிலாக வேலூர் மாவட்டத்திலிருந்து அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு, மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்,


திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, மாவட்ட கலெக்டர் சிவசௌந்தரவள்ளி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், கலெக்டர் எஸ்.சரவணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%