மனிதம் !

மனிதம் !


கனமழை பெய்கிறதென்று சாலையோரம் வாகனம் நிறுத்தி மரத்தடியில் ஒதுங்கலாம் என்றால் மரம் ஏதும் காணவில்லை !


ஏதாவது வீட்டுப் பக்கம் ஒதுங்கலாம் என்றால்...

வாசலில் நாய்கள் ஜாக்கிரதை அறிவிப்பு பயமுறுத்தியது !


ஏதாவது கடை வாசலில் ஒதுங்க நினைத்தால் 'வாகனத்தை நிறுத்தாதீர் '

என்ற அறிவிப்பு தொங்குகிறது !


இறுதியில் தெரிந்தது டாஸ்மார்க் கடையில் முற்றம்....

வண்டியோடு ஒதுங்கினேன் !


"என்ன தல , நீங்க கூட மழைக்கு இதமா கட்டிங் போட வந்துட்டீங்க போல !"

என்றான் தெரிந்த ஒருவன்...


மழையில் நனைவதே உத்தமம் என்று மழையோடு மழையாய் கலந்தேன் நான் !




எம்.பி.தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%