*தலை பாரம்*

*தலை பாரம்*



 

வைகுந்த வாசனின் ஆஸ்தான பக்திமான்.. 

வெகுநாள் இழுத்த வழக்கொன்று முடிய.. 

வந்த சொத்தில் பாதி விற்று.. கண்ணனுக்கு செய்தான் அழகு கிரீடம்.. 


நல்ல நாள் பார்த்து .. 

பாந்தமாய் அவனுக்கு அர்ப்பணித்து. 

மனம் நிறைவாய் துயில 

வந்தவன் அரண்டானே! 


பக்தா.. உன் கிரீட பாரம் .. 

சுமக்க வலி வந்ததடா எனக்கு.. 

கண்ணன் குரல் கனவில் கேட்டு.. 

குழம்பிய பக்தனவன்.. 


விற்ற சொத்தின் நிலை பார்க்க.. 

வாங்கிய மகானுபாவன்.. 

அங்கிருந்த குடிசைகளை அகற்றியிருந்தான்.. 


மக்கள் மரத்தடியிலும் கிடைத்த நிழலிலும்.. 

கண்ணீருடன் ஒண்டிருந்ததை பார்த்தே.. 

அனைவருக்கும் அடைக்கலம் தந்தார் தன் மீதி நிலத்திலே.. 


பொது தோட்டம் ஒன்று போட்டு.. 

விளைவித்தவை அவர்களுக்கே.. 

என்றே சொல்லிவிட உற்சாகமாய் உழைத்தனரே மக்களும்.. 


 செய்தி வந்து கோவிலிலிருந்து.. 

சாத்தியிருந்த தங்க கிரீடம் .. 

ஜொலிக்குதே வைரம் போல.. 

மக்களும் கூடி தரிசிக்கின்றனர்

அலை போலே.. 


ஓடினார் சந்நிதிக்கு தலைக்குமேல்.. 

கூப்பிய கரங்களுடன் கண்ணீர் மாலையாக சொரிய.. 


மந்தகாசப் புன்னகையுடன்

கண்ணவன் காட்சியளித்தான்..

மயிற்பீலி குறைகிறதே பக்தனே

என கேட்ட குரலுக்கு..


முதல்நாள் தோட்டத்தில் மயிலொன்று உதிர்த்த பீலியை..

வேட்டி மடிப்பில் வைத்திருந்ததை கொடுக்க..


கிரீடத்தில் அதனை பொருத்த..

பக்தி ரசம் சொட்ட..

மனம் குளிர்ந்தது அந்த பரந்தாமனோடு..

அக்குடிசை மக்களுமே..



தஞ்சை பியூட்டிஷியன்

 உமாதேவி சேகர்..

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%