🌳 🌳
விதையாய் பிறந்து
மண்ணில் வேரூன்றும்
மனித வாழ்வு...
நினைவுகளின் நிழல்கள்
வேர்களாய் தாங்க...
அனுபவம், அறிவு, கல்வி
தண்டாய் நிமிர்ந்து நிற்கும்.
எண்ணங்கள் கிளைகளாய் எங்கும் பரந்து,
புதிய பாதைகளைத் தேடி விரிய
சுவாசமும் சிந்தனையும்
பசுமை இலைகளாய்...
சில நேரம் மலரும்,
சில நேரம் உதிரும்.
மலர்களாய் கனவுகள்,
கனிகளாய் நன்மைகள்
மற்றவர்க்கு நிழலாய்,
இனிமையாய் பரவும் கருணை.
எவ்வளவு உயர வளர்ந்தாலும்
நிழல், சுவாசம் தந்து
உதவிய கிளைகளையும் இலைகளையும் வேர்களையும் மறக்காத ஆதிமரம் போல...
பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்வில்
நம்மை உண்மையாய் நிலைநிறுத்துவது
செல்வம், புகழ் அல்ல...
நமக்கு காலத்தே உதவிய
அன்பு கொண்ட உள்ளங்களும்...
நாம் பிறரிடம் கொண்ட
அன்பே நமது அடையாளமாக
மனித வாழ்வு🌿
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?